இன்று இரவு 7.30 மணி அளவில் ரீல்ஸ் என்ற செயலியை இன்ஸ்டாகிராம் நிறுவனம் வெளியிடவுள்ளது.
எல்லையில் சீனா இந்திய ராணுவத்திற்கு இடையே ஏற்பட்ட மோதலை கணக்கில் கொண்டும், அதேபோல் இந்திய தகவல்கள் திருடப்படுவதற்கான வாய்ப்புகள் இருப்பதை கருத்தில் கொண்டும், 59 சீன செயலிகளை தடை செய்து உத்தரவிட்டது. அதில், டிக் டாக், ஹலோ, ஷேர்இட் உள்ளிட்ட பெரும்பாலான இந்தியர்கள் பயன்படுத்தக்கூடிய செயலிகள் அடங்கி இருந்தது குறிப்பிடதக்கது. அதிலும் டிக் டாக் ஹலோ உள்ளிட்ட செயலிகள் இல்லாமல் பலருக்கு வேதனையாக இருக்கிறது.
எனவே இவை இரண்டிற்கும் மாற்றாக இந்தியாவில் பல செயலிகள் உருவெடுத்து வருகின்றன. குறிப்பாக கூற வேண்டுமெனில், இந்திய நிறுவனமான ஷேர் சாட் செயலி தற்போது moj என்ற செயலியை அறிமுகப்படுத்தி பிளே ஸ்டோரில் வெளியிட்டுள்ளது. இதேபோல் பல உலக நாடுகளைச் சேர்ந்த நிறுவனங்களும் டிக்டாக்கிற்கு மாற்றாக பல செயலிகளை உருவாக்கி தொடர்ந்து பிளே ஸ்டோரில் வெளியிட்டு வருகின்றன. அந்த போட்டி வரிசையில் தற்போது இன்ஸ்டாகிராம் களமிறங்கியுள்ளது.
அதன்படி, இன்று இரவு 7.30 மணி அளவில் ரீல்ஸ் என்ற செயலியை ப்ளே ஸ்டோரில் அந்நிறுவனம் வெளியிடவுள்ளது. இந்த செயலியில் பயனாளர்கள் 15 நிமிட வீடியோக்களை பாட்டுகள் மூலமாகவோ, வசனங்கள் மூலமாகவோ பதிவு செய்து போஸ்ட் செய்யலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த செயலியில் 25 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மொழிகளில், பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட பாடல்கள் default ஆக செயலினுள் இருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.