ரஷ்ய படையினரின் தாக்குதலில் காயம் அடைந்தவர்களை அதிபர் ஜெலன்ஸ்கி மருத்துவமனைக்கு நேரில் சென்று பார்வையிட்டு நலம் விசாரித்துள்ளார்.
உக்ரைனில் ரஷ்ய படையினரின் தாக்குதலில் காயம் அடைந்தவர்களை அதிபர் ஜெலன்ஸ்கி மருத்துவமனைக்கு நேரில் சென்று பார்வையிட்டு நலம் விசாரித்துள்ளார்.அப்போது ஒவ்வொருவராக கைகுலுக்கி நலம் விசாரித்து சென்றபோது சிகிச்சையில் இருந்த இளம்பெண் ஒருவர் அவர் அதிபர் என்பதையும் அறியாமல் டிக்டாக்கில் நீங்கள் மிகவும் பிரபலமாக உள்ளீர்கள் எனக் கூறியது நகைச்சுவையை ஏற்படுத்தியுள்ளது. அந்த பெண்ணிற்கு அதிபர் ஜெலன்ஸ்கி பூங்கொத்து வழங்கி அவர் விரைவில் குணமடைய வாழ்த்து தெரிவித்து விட்டு சென்றுள்ளார்.