Categories
மாநில செய்திகள்

டிக்டாக்கில் பழகி ஏமாற்றம்.. வாட்ஸப் ஆரம்பித்து பழிவாங்கிய காதலிகள்… திணறி வரும் கார்த்தி…!!

ஊட்டியில் டிக்டாக் மூலம் பெண்களை காதல் வலையில் சிக்க வைத்து பண மோசடி செய்து வரும் டாக்ஸி ஓட்டுநரை கைது செய்ய பலரும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ஊட்டியில் வசிக்கும் டாக்ஸி ஓட்டுநர் கார்த்தி. இவர் டிக்டாக் செயலி மூலமாக லதா, சுதா, வானி, சுந்தரி, சனா, கவிதா, அம்முராஜி, ரோஜா, லைலா, விதிதா, ராதே, அனு, புஷ்பா, கோகிலா மற்றும் வட மாநிலத்தைச் சேர்ந்த ஒரு பெண் போன்ற சுமார் 15 பெண்களுடன் பழகி காதல் வலையில் சிக்க வைத்துள்ளார். அதன் பின்பு அவர்களின் வீடியோவை ஆதாரமாக வைத்துக்கொண்டு ஏமாற்றி பணம் பறித்து வந்துள்ளார்.

மேலும் திருமணமான பல பெண்கள், ஐடி நிறுவன ஊழியர்மற்றும்  அடகு கடை அதிபரின் மனைவி போன்று கார்த்திக்கின் வலையில் சிக்கிய பல பெண்கள் இருக்கிறார்கள். இதனையடுத்து டிக்டாக் செயலி தடை செய்யப்பட்டதை தொடர்ந்து இவரது காதல் லீலைகள் முடக்கி வைக்கப்பட்டிருந்தது.எனினும் தற்போது டகாடக் என்ற செயலி வாயிலாக மீண்டும் காதல் வலையை வீச தொடங்கியுள்ளார் கார்த்தி.

இந்நிலையில் கார்த்தி ஏமாற்றிய சுமார் பத்துக்கும் அதிகமான பெண்கள் வாட்ஸப்பில் இணைந்து “களவாணி கார்த்தி” எவ்வாறெல்லாம் பெண்களை ஏமாற்றி வருகிறார் என்பதை அவர்களுக்குள் பகிர்ந்து கொண்டுள்ளனர். அதன் பின்பு கார்த்தி பெயரிலேயே இரண்டு போலியான கணக்குகளை தொடங்கி அவரை பற்றிய பல உண்மைகளை வெளிச்சத்திற்கு கொண்டு வந்துள்ளனர். மேலும் கார்த்தியால் ஏமாற்றப்பட்ட பெண்கள் அனைவரும் குடும்ப பெண்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் பொய்யான வாக்குறுதிகளின் மூலம் பெண்களை காதலித்து அவர்களை வீடியோ எடுத்து பண மோசடியில் ஈடுபட்டு வந்த கார்த்தி தன் முன்னால் காதலிகளின் இந்த தாக்குதலுக்கு பதில் கூற முடியாமல் திணறி பதறிப்போய் இருக்கிறார். மேலும் கார்த்தி மீது வழக்கு தொடர தேவையான ஆடியோ மற்றும் வீடியோ ஆதாரங்கள் இருந்தும் அவர் மீது தற்போதுவரை காவல்துறையினர் நடவடிக்கை எடுக்காமல் உள்ளனர். இதனால் கார்த்தியை உடனடியாக கைது செய்ய பலரும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Categories

Tech |