இந்தியாவை சேர்ந்த 17 வயது சிறுமி டிக் டாக் பதிலாக புதிய செயலி ஒன்றை உருவாக்கியுள்ளார்.
தற்போதைய காலகட்டத்தில் அனைவரும் செல்போன் பயன்படுத்தி வருகிறார்கள். அவ்வாறு செல்போன் பயன்படுத்தும் பயனாளர்கள் அனைவரும் தங்கள் தேவைக்கு ஏற்றவாறு பல்வேறு செயலிகளை பயன்படுத்துகின்றனர். அதில் மிகவும் பிரபலமான ஒன்று டிக் டாக். அதனை பெரும்பாலான பயனாளர்கள் பயன்படுத்தி வந்தனர். இதற்கு மத்தியில் கொரோனா பாதிப்பு சீனாவிலிருந்து பரவத் தொடங்கியது. அது மட்டுமன்றி இந்தியா மற்றும் சீனா இடையே கடும் மோதல் போக்கு நிலவியது.
இதனையடுத்து டிக் டாக் உள்ளிட்ட சீன செயலிகளுக்கு இந்தியா தடை விதித்தது. அதற்கு மாற்றாக பல்வேறு செயலிகள் தற்போது வந்து கொண்டிருக்கின்றன. இந்நிலையில் டிக் டாக் போலவே “தீக் தக்” என்ற புதிய செயலியை இங்கிலாந்தில் வசிக்கும் 17 வயது இந்திய சிறுமி சாய்னா ஜோதி உருவாக்கியுள்ளார். இந்த செயலியில் ஒரு வீடியோக்களை உருவாக்கி வாட்ஸ்அப், இன்ஸ்டால் மற்றும் ஃபேஸ்புக் உள்ளிட்டவற்றின் பகிர முடியும். இந்த செயலியில் விரைவில் பல அம்சங்களை வழங்க உள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். இந்த சிறுமியின் அசத்தல் கண்டுபிடிப்பு பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.