Categories
உலக செய்திகள்

டிக்டாக் செயலி மீதான தடை நீக்கம்…. பயனாளர்கள் மகிழ்ச்சி….!!!

டிக்டாக் செயலுக்கு விதிக்கப்பட்ட தடையை திரும்பப் பெறுவதாக பாகிஸ்தான் தொலைத் தொடர்பு ஆணையம் தெரிவித்துள்ளது. டிக்டாக் செயலியை லட்சக்கணக்கானோர் பயன்படுத்தி வருகின்றனர். இந்த செயலியில் மிகவும் ஆபாசமான மற்றும் எல்ஜிபிடி சமூகத்தினரை ஊக்குவிக்கும் வகையிலான பதிவுகள் இருப்பதாக கூறி கடந்த ஆண்டு பாகிஸ்தான் தொலைத் தொடர்பு ஆணையம் இந்த செயலிக்கு தடை விதித்தது. இதையடுத்து ஆபாசத்தை பரப்பும் கணக்குகளை தடுப்பதாக டிக் டாக் நிறுவனம் உறுதி அளித்துள்ளதால் 10 நாட்களுக்கு பிறகு டிக் டாக் செயலி மீதான தடை நீக்கப்பட்டது.

அதன்பிறகு கடந்த ஜூலை மாதம் மீண்டும் தடை விதிக்கப்பட்டது. இருந்தாலும் இந்த விவகாரம் தொடர்பாக பாகிஸ்தான் தொலைத் தொடர்பு ஆணையம் டிக் டாக் நிறுவனத்துடன் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வந்தது. இந்த நிலையில் டிக் டாக் செயலிக்கு விதிக்கப்பட்ட தடையை திரும்பப் பெறுவதாக பாகிஸ்தான் தொலைத் தொடர்பு ஆணையம் அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பால் டிக்டாக் பயனாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Categories

Tech |