பெண் ஒருவர் இரவு தனியாக அமர்ந்து டிக்டாக் வீடியோ பதிவு செய்யும் போது வீடியோவில் கண்ட காட்சி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பிரிட்டன் லிவர்பூலைச் பகுதியைச் சேர்ந்த Kayleigh Corby (33) என்பவர் தன் கணவன் இரவு வேலைக்கு சென்றவுடன் குழந்தைகளை தூங்க வைத்து விட்டு டிக்டாக் வீடியோ பதிவு செய்து கொண்டிருந்தார். பின்னர் பதிவு செய்த வீடியோவை தன் தோழிக்கு அனுப்பும்போது வீடியோவில் மர்ம நபர் ஒருவர் பின்னால் நிற்பதை கவனித்துள்ளார்.
Kayleigh Corby பயந்துபோய் தன்னுடைய பெற்றோருக்கு தகவல் அளித்துள்ளார். அவரின் பெற்றோர் இரவு நேரத்திலும் தன் மகள் மற்றும் பேரக்குழந்தைகளின் ஆபத்துக் கருதி உடனே வந்துள்ளனர். இதனை தொடர்ந்து அவரின் பெற்றோர் காவல்துறையினருக்கு தகவல் அளித்துள்ளனர். Kayleigh அந்த மர்ம எங்கே சென்றார் என்ற தகவல்கள் குறித்து வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.