Categories
தேசிய செய்திகள்

டிக் டாக் காதல்… திருப்பதியில் திருமணம்… அனுமதிக்காத பெற்றோர்… ஒன்றாக உயிரை விட்ட கணவன், மனைவி..!!

காதல் திருமணத்திற்கு தொடர்ந்து பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் புதுமண தம்பதிகள் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது

ஆந்திர மாநிலத்தில் இருக்கும் விஜயவாடாவை சேர்ந்தவர்கள் பவன்குமார் மற்றும் சைலஜா. இவ்விருவரும் டிக் டாக் செயலி மூலம் பழகி வந்தனர். அதன் பிறகு இருவரிடையே காதல் தோன்றியதையடுத்து திருமணம் செய்து கொள்ள முடிவு செய்து இருவரது பெற்றோரிடமும் இதுகுறித்து தெரிவித்துள்ளனர்.

ஆனால் இருவரது வீட்டிலும் காதல் திருமணத்திற்கு எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இதனால் வீட்டை விட்டு வெளியேறிய காதல் ஜோடி திருப்பதியில் வைத்து கடந்த மாதம் மூன்றாம் தேதி திருமணம் செய்துள்ளனர். திருமணத்தை அடுத்து பவன்குமாரின் சொந்த ஊருக்கு தம்பதிகள் சென்ற நிலையில் அவரது பெற்றோர் வீட்டில் அவர்களை ஏற்க மறுத்துவிட்டனர்.

எனவே இருவரும் தனியாக வீடு எடுத்து தங்கி இருந்தனர். தொடர்ந்து பெற்றோர்கள் தரப்பில் எதிர்ப்பு தெரிவித்து வந்ததால் மனமுடைந்து போன தம்பதியினர் நேற்று ஒரே சேலையில் இருவரும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டனர். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |