Categories
உலக செய்திகள் டெக்னாலஜி

டிக் டாக் தடை .. ரூ.45 ஆயிரம் கோடி பொருளாதார இழப்பு!!

பைட் டான்ஸ் நிறுவனத்திற்கு இந்தியாவில் தொடர்ந்து உபயோகத்தில்  இருந்த 59 சீன செயலிகள் தடை செய்யப்பட்டதால் ரூ. 45 ஆயிரம் கோடி இழப்பு ஏற்படும் என தகவல் வெளியாகியுள்ளன.

சீன ராணுவ வீரர்களுடன் ஏற்பட்ட மோதலில் கடந்த ஜூன் 15ம் தேதி கிழக்கு லடாக் பகுதியில் 20 இந்திய ராணுவ வீரர்கள் வீரமரணம் அடைந்துள்ளனர்,எனவே நாட்டில் சீனத் தயாரிப்புகளை தடை செய்ய வேண்டும் என பலர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதனிடையே, நாட்டின் பாதுகாப்பை காரணம் காட்டி டிக் டாக், ஹலோ போன்ற 59 சீன செயலிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்த நடவடிக்கைக்கு சீனா கண்டனம் தெரிவித்திருந்தது.டிக் டாக் தடையின் பேரில் அதன் நிறுவனமான பைட் டான்ஸிற்கு ரூ‌.45 ஆயிரம் கோடிரூபாய்  இழப்பு ஏற்படும் என தகவல்கள் சீன ஊடகங்களில் வெளியாகியுள்ளன.

இந்தியாவில் 611 மில்லியன் பேர் இந்த ஆண்டில் மட்டும்  டிக் டாக் செயலியை  பதிவிறக்கம் செய்திருந்த நிலையில் தற்போது டிக் டாக் செயலி தடை செய்யப்பட்டதால் இந்தியாவில் உள்ள பைட் டான்ஸ் நிறுவனங்களில் பணிபுரியும் இரண்டாயிரம் பேரின் வேலை கேள்வி குறியாக உள்ளது என தகவல்கள் வெளியாகியுள்ளன.

Categories

Tech |