Categories
உலக செய்திகள்

டிக் டாக் பதிவிட்ட முன்னாள் மனைவி…. 1400 கி.மீ தாண்டி கொலை செய்த கணவர்…. பெரும் அதிர்ச்சி….!!!!!!!

சமீபத்தில் அமெரிக்காவின் சிகாகோவிற்கு இடம் பெயர்ந்த பாகிஸ்தானி அமெரிக்கா புகைப்படக் கலைஞர் சானியா கான் வயது(29). இவர் தனது கொடுமையான கடந்த கால திருமண வாழ்க்கை பற்றியும் அவற்றில் தான் பெற்ற கஷ்டங்களை விளக்கி டிக் டாக்  ஒன்றில் வீடியோ பதிவிட்டு இருக்கிறார். இதனை இணையதளத்தில் பார்த்து அவரது முன்னாள் பாகிஸ்தானி கணவர் ரஹூல் அகமது (39) மிகுந்த கோபம் அடைந்தது மட்டுமில்லாமல் ஜார்ஜியா முதல் சிகாகோ வரை சுமார் 1400 கிலோ மீட்டர் தொலைவிற்கு பயணம் செய்து தனது முன்னாள் மனைவியை துப்பாக்கியால் சுட்டுக்கொன்று விட்டு தானும் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

இது தொடர்பாக சிகாகோ உள்ளூர் செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ள தகவலில் கூறப்பட்டிருப்பதாவது, ராகுல் அகமது கடந்த சில தினங்களாக காணவில்லை அவரது முன்னாள் மனைவியை சந்திக்க சென்றிருக்கலாம் என போலீசாரிடம் புகார் ஒன்றை அளித்துள்ளார். இதனைத் தொடர்ந்து சானியா அடுக்குமாடி குடியிருப்பில் சோதனை மேற்கொண்ட போலீசார் ராகுல் மற்றும் சானியா கான் இருவரும் துப்பாக்கியால் சுடப்பட்டு இறந்து கிடப்பது தெரியவந்துள்ளது. சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்ட நிலையில் ரகுல் அகமது மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும் வழியில் உயிரிழந்துள்ளார். பாகிஸ்தானி அமெரிக்கா புகைப்படக் கலைஞர் சானியா கான் மற்றும் ராகுல் அகமது இருவரின் இறப்பு அந்த பகுதியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

Categories

Tech |