கனடாவில் டிக் டாக் பிரபலம் உயிரிழந்த சம்பவம் ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இந்தியாவை பூர்வீகமாகக் கொண்டவர் மேஹா தாகூர்(21). இவர் மேஹா தாகூர் டிக் டாக், இன்ஸ்டாகிராம் போன்ற வலைதளங்கள் மூலமாக நடனம், இசை உள்ளிட்ட பல்வேறு வீடியோக்களை வெளியிட்டு கனாடவில் மிகவும் பிரபலம் அடைந்துள்ளார். இவரை டிக் டாக்கில் சுமார் 9 லட்சத்து 30 ஆயிரம் பேர் பின் தொடர்ந்தனர். அதேபோல் இன்ஸ்டாகிராமில் 10 லட்சத்திற்கும் அதிகமான பாலோவர்ஸ்களை வைத்துள்ளார். கடந்த 24-ஆம் தேதி மேஹா தாகூர் திடீரென உயிரிழந்து விட்டதாக அவரது பெற்றோர் வெளியிட்ட அறிவிப்பு ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் அவரது உயிரிழப்பிற்கான காரணம் என்ன என்பது தெரியாத நிலையில் மாரடைப்பு மேஹா தாகூர் உயிரிழந்திருக்கலாம் என கூறபடுகிறது.