திருச்சியில் ஸ்பா என்ற பெயரில் பெண்களை வைத்து விபச்சாரம் செய்ததாக பிரபல ரவுடி பேபி சூர்யா கைது செய்யப்பட்டுள்ளார்.
டிக் டாக்கில் சில நாட்களாக மிக பிரபலமாகி வலம் வந்தவர் ரவுடி பேபி சூர்யா. அவர் திருச்சி மாநகரில் மசாஜ் சென்டர் என்கின்ற பெயரில் பெண்களை வைத்து விபச்சாரத்தில் ஈடுபடுத்துவதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. அதனடிப்படையில் திருச்சி தில்லைநகர், உறையூர், கேகே நகர் கண்டோன்மென்ட் உள்ளிட்ட காவல் நிலையங்களுக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள 5 ஸ்பா சென்டர்களில் தனிப்படை போலீசார் நேற்று தீவிர சோதனை நடத்தினர்.
அதில் திருச்சி டிவிஎஸ் டோல்கேட் அருகே உள்ள நட்சத்திர விடுதியின் மாடியில் அமைந்துள்ள சன்ஸ்பா என்ற மசாஜ் சென்டரில் சோதனை செய்தபோது, அங்கு பெண்களை வைத்து விபச்சாரம் செய்தது உறுதி செய்யப்பட்டது. மேலும் அந்த சென்டரில் டிக் டாக் பிரபலம் திருப்பூரை சேர்ந்த ரவுடி பேபி சூர்யா உள்ளிட்ட பல பெண்கள் இருந்ததை கண்டு காவல்துறையினர் அதிர்ச்சி அடைந்தனர்.
இதனையடுத்து ரவுடி பேபி சூர்யா மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இதற்கு முன்னதாக போலீசாரிடம் பிடிபட்ட சூர்யாதான் பாலியல் தொழிலில் ஈடுபடவில்லை. இதற்கும் எனக்கும் சம்பந்தமில்லை என்று மறுப்பு கூறிவிட்டார். இருந்தாலும் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள். விசாரணையில் அந்த சென்டருக்கு உரிமையாளரே சூர்யா தான் என்பது தெரியவந்தது. இதனையடுத்து அவருக்கு புரோக்கராக செயல்பட்ட தினேஷ் என்பவரையும் போலீசார் கைது செய்துள்ளனர்.