டிக்டாக்கில் அறிமுகமான இளம்பெண்ணை தனது நண்பருடன் சேர்ந்து கூட்டுப் பாலியல் செய்த நபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
கேரள மாநிலம், கொல்லம் பகுதியை சேர்ந்த இளம்பெண் ஒருவர் டிக் டாக் மூலம் அறிமுகமான நண்பரை சந்திப்பதற்கு கோழிக்கோடு வந்துள்ளார். அங்கு அப்பெண்ணை சந்திக்க வந்த இளைஞன் தான் தங்கியிருக்கும் அறைக்கு அழைத்துச் சென்று அப்பெண்ணுக்கு கூல்டிரிங்ஸில் மது கலந்து கொடுத்து அவரது நண்பர்களுடன் சேர்ந்து கூட்டு பாலியல் செய்துள்ளார். பிறகு அந்த பெண்ணின் உடல்நிலை மோசமானதன் காரணமாக தனியார் மருத்துவமனையின் வெளியில் சென்று போட்டு விட்டு அங்கிருந்து தப்பி ஓடி உள்ளனர்.
அங்கு இருந்தவர்கள் அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று சிகிச்சை கொடுத்துள்ளனர். அப்போது அந்தப் பெண் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டது தெரியவந்தது. இதையடுத்து மருத்துவமனை நிர்வாகம் காவல் துறைக்கு தகவல் தெரிவித்தனர். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் அந்த இளம் பெண்ணிடம் காதல் குறித்த தகவலை பெற்றுக்கொண்டு தீவிரமாக தேட தொடங்கினர். தற்போது அந்த பெண்ணின் டிக் டாக் காதலன் கைது செய்யப்பட்டுள்ளார். மீதமுள்ள 3 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.