டிக் டாக் மூலமாக ஏற்பட்ட உறவால் கணவரை தூக்கி எறிந்து தோழியுடன் ஓட்டம் பிடித்த பெண்ணின் செயல் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஆந்திர மாநிலம், கர்னூல் மாவட்டம் ,ஆதோணியை சேர்ந்த அர்ச்சனாவுக்கும் அதே பகுதியில் வசிக்கும் ரவிக்குமார் என்பவருக்கும் சென்ற 13 ஆண்டுகளுக்கு முன் கல்யாணம் நடந்தது . இவர்களுக்கு 2 மகன்கள் இருக்கிறார்கள் . இந்நிலையில் அர்ச்சனாவிற்கும் பெங்களூருவை சேர்ந்த அஞ்சலி என்பவருக்கும் டிக் டாக் மூலம் பழக்கம் ஏற்பட்டது. இருவரும் தொடர்ந்து பேசி தங்களது நட்பை வளர்த்துக்கொண்டனர்.
மேலும் அஞ்சலி ஆதோணியில் உள்ள அர்ச்சனா வீட்டில் பல நாள் தங்கியிருந்தார். அப்போது அஞ்சலிக்கும் ,அர்ச்சனாவிற்கும் இடையே இருந்த நட்பு எல்லை மீ்றியதை பார்த்த குடும்பத்தினர் 2பேரையும் பிரிக்க முயன்றனர். ஆனால் அவர்களால் பிரிக்க முடியவில்லை . அஞ்சலி அர்ச்சனாவுக்கு யாருக்கும் தெரியாமல் செல்போன் வாங்கி கொடுத்தார் . அதன் மூலம் இருவரும் தொடர்ந்து பேசி வந்துள்ளனர் . இதனை கண்ட பெற்றோர் மற்றும் கணவர் ரவிகுமார் அர்ச்சனாவை திட்டியுள்ளார்கள் .
இந்நிலையில் கடந்த வாரம் அர்ச்சனா தனது 2 குழந்தைகளையும் அழைத்துக்கொண்டு வீட்டில் இருந்து புறப்பட்டார் . அர்ச்சனாவை பல்வேறு இடங்களில் தேடியும் அவர் கிடைக்காத காரணத்தால் ஆதோனி காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர். இப்புகாரின் பேரில் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். டிக் டாக் மோகத்தால் தங்கள் பெண்ணின் வாழ்கை சீரழிந்து விட்டதாக அர்ச்சனாவின் பெற்றோர்கள் கதறுகின்றனர்.