டிசம்பர் மாத இறுதிக்குள் அனைவரும் முதல் டோஸ் தடுப்பூசி செலுத்திக் கொண்டிருக்க வேண்டும் என்று மாநில அரசுக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
இந்தியாவில் கடந்த ஜனவரி 16ஆம் தேதி முதல் பொதுமக்களுக்கு தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. இதில் முதற்கட்டமாக 40 வயதுக்கு மேற்பட்டவர்கள் போடப்பட்டு வந்த தடுப்பூசி, பின்னர் 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு போடப்பட்டு வந்தது. கடந்த 21ம் தேதி வரை இந்தியாவில் 100 கோடி தடுப்பூசி போடப்பட்டுள்ளது. இதில் 72 கோடி பேர் முதல் தடுப்பூசி போட்டவர்களாகவும், 31 பேர் 2 டோஸ் தடுப்பூசி செலுத்தி கொண்டவர்களாகவும் உள்ளனர். ஆனால் முதல் தடுப்பூசி போட்டவர்களின் தவணை காலம் முடிந்த பிறகும், இரண்டாவது டோஸ் ஊசி போடாதவர்கள் சுமார் 11 கோடி பேர் உள்ளனர்.
76 சதவீதம் ஒரு டோஸ் தடுப்பூசி போட்டுள்ள நிலையில், மீதமுள்ள 34 சதவீத மக்கள் முதல் டோஸ் தடுப்பூசி கூட போடாமல் இருந்து வருகின்றன. இதனால் வரும் டிசம்பர் 31-ஆம் தேதிக்குள் நாட்டில் உள்ள அனைவரும் ஒரு டோஸ் தடுப்பூசியாவது செலுத்தி இருக்க வேண்டும் என்று மாநில அரசுகளுக்கு மத்திய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. இதுதொடர்பாக மாநில சுகாதாரத்துறை செயலாளர்களுடன் மத்திய அரசு தொடர்ந்து ஆலோசனை நடத்தி வருகின்றது. 11 மாநிலங்களில் தடுப்பூசி போடுவது குறைந்துள்ளதாகவும், அங்கு உடனடியாக நடவடிக்கை மேற்கொண்டு மக்களுக்கு தடுப்பூசி செலுத்த வேண்டும் எனவும் தெரிவித்துள்ளது.