45வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் லக்னோவில் நடைபெற்றது. இதில் பல்வேறு மாநில நிதி அமைச்சர்கள் கலந்து கொண்டனர்.கூட்டத்திற்கு பின் செய்தியாளர்களிடம் பேசிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், கொரோனா சிகிச்சைக்கு பயன்படுத்தப்படும் 11 வகை முக்கிய மருந்துகள், கருவிகளுக்கான ஜிஎஸ்டி வரி சலுகை டிசம்பர் மாதம் வரை நீட்டிக்கப்பட்டு உள்ளதாக அறிவித்தார். தமிழகம் உள்ளிட்ட மாநிலங்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் ஜிஎஸ்டிக்குள் பெட்ரோல், டீசல் வராது எனவும் தெரிவித்துள்ளார்.
Categories