நாட்டின் பல்வேறு பகுதிகளில் உள்ள பொது மற்றும் தனியார் துறை வங்கிகளின் விடுமுறை நாட்களின் பட்டியலை ஒவ்வொரு மாதமும் ரிசர்வ் வங்கி வெளியிட்டு வருகிறது. அதன்படி டிசம்பர் மாதத்தில் 16 நாட்கள் விடுமுறை தினமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விடுமுறை நாட்கள் மாநிலங்களுக்கு ஏற்றவாறு மாறுபடும்.
அனைத்து வங்கிகளுக்கும் இந்த விடுமுறை நாட்கள் பொருந்தாது. எனவே வாடிக்கையாளர்கள் வங்கி தொடர்பான பணிகளை திட்டமிடுவதற்கு முன்னர் விடுமுறை தினங்களை திட்டமிட்டு கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. மக்களின் வசதிக்காக டிசம்பர் மாதம் வங்கி விடுமுறை நாட்களில் பட்டியலை ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ளது. அதன்படி டிசம்பர் 3, 5, 11, 12, 18, 19, 24, 25, 26, 27, 30, 31 ஆகிய தேதிகளில் வங்கிகள் இயங்காது என அறிவிக்கப்பட்டுள்ளது.