பஞ்சாப் நேஷனல் வங்கி ஒருமுறை பயன்படுத்தும் கடவுச்சொல் ( ஓடிபி) அடிப்படையில் பணம் எடுக்கும் வசதியை டிசம்பர் 1ம் தேதி முதல் தொடங்க உள்ளது. அதன்படி டிசம்பர் 1-ஆம் தேதி முதல் இரவு எட்டு மணியிலிருந்து காலை 8 மணி வரை பஞ்சாப் நேஷனல் வங்கி ஏடிஎம்மில் ஒரு முறையில் ரூபாய் 10 ஆயிரத்துக்கும் அதிகமான பணம் எடுக்க இனி ஓடிபி தேவைப்படும். அதனால் வாடிக்கையாளர் பணம் எடுக்கும்போது தங்களின் மொபைலை உடன் எடுத்துச் செல்ல வேண்டும் என்று தெரிவித்துள்ளது.
பணப் பரிவர்த்தனைகளை மிகவும் கவனமுடன் கையாள்வதற்கும், பாதுகாப்பு அம்சங்களுடன் கையாள்வதற்கும் பஞ்சாப் நேஷனல் வங்கியில் இந்த முறையை பின்பற்றுகிறது. பல்வேறு வகைகளில் ஹேக்கர்கள் மூலம் பண பரிவர்த்தனைகள் தடுக்கப்படுகிறது அல்லது பணப்பரிவர்த்தனையில் முறைகேடு செய்யப்படுவதை தடுக்கும் பொருட்டு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக வாடிக்கையாளர்கள் கருதுகின்றனர்.