Categories
மாநில செய்திகள்

டிசம்பர் 1 முதல் கேபிள் டிவி கட்டணம் உயர்வு?….. வெளியான திடீர் அறிவிப்பு….!!!!

சேனல் நிறுவனங்கள் டிசம்பர் 1 முதல் கேபிள் டிவி கட்டணம் உயர்த்தப்பட உள்ளதாக கேபிள் ஆபரேட்டர்கள் தெரிவித்துள்ளனர். விரும்பிய சேனல்களுக்கும் மாறும் முறை 2019 பிப்ரவரி மாதம் அறிமுகம் ஆனது. அதில் சேனல் நிறுவனங்கள் தங்களின் சேனல் களுக்கான அதிகபட்ச கட்டடத்தை 19 ரூபாய் வரை நிர்ணயித்துக் கொள்ள முடியும். இந்த நிலையில் திருத்தி அமைக்கப்பட்ட கட்டணம் ஜனவரி மாதம் வெளியிடப்பட்டது. அதில் ஒரு சேனலில் அதிகபட்ச கட்டணம் 12 ரூபாயாக குறைந்தது.

அதனால் வாடிக்கையாளர்கள் அதிகமான சேனல்களை பார்க்க முடியும் என்று கூறப்படுகிறது. இந்தத் திருத்தப்பட்ட கட்டணத்திற்கு சேனல் நிறுவனங்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. அதனால் குறிப்பிட்ட சேனல்கள் அடங்கிய தொகுப்பிற்கு தனி கட்டணம் விதிக்க திட்டமிடப்பட்டுள்ளது. அதற்கு உதாரணமாக டிஸ்னி ஹாட்ஸ்டாரில் தொகுப்பு சேனல்களின் கட்டணம் 49 ரூபாய் ஆக தற்போது உள்ளது. அது 69 ரூபாய் ஆக உயர்த்தப்பட உள்ளது.

இதனைப் போலவே ஒவ்வொரு சேனல்களின் கட்டணமும் உயர்த்தப்பட உள்ளது. இவ்வாறு மாறும் போது பிரதான சேனல்களின் தொகுப்பு கட்டணம் மாறும். அதனால் மாத கேபிள் கட்டணம் 30 முதல் 40 சதவீதம் வரை உயரும் என கேபிள் ஆபரேட்டர்கள் தெரிவித்துள்ளனர். இது பொதுமக்கள் மத்தியில் சற்று அதிர்ச்சி தரும் செய்தியாக அமைந்துள்ளது.

Categories

Tech |