கோவையில் வருகின்ற டிசம்பர் 10ஆம் தேதி வரை அரசியல் கட்சியினரும், அமைப்பினரும் ஆர்ப்பாட்டம், பொதுக்கூட்டம், உண்ணாவிரதம் உள்ளிட்ட பேரணி நடத்த அனுமதி இல்லை என்ற காவல் துறை உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள செய்தியில், கோவையில் கடந்த சில நாட்களாக பல்வேறு அமைப்பினர் ஆர்ப்பாட்டம், போராட்டம் மற்றும் ஊர்வலம் போன்ற நிகழ்ச்சிகள் நடத்த திட்டமிட்டு இருப்பதாக சமூகவலைதளங்களில் எந்தவிதமான முறையான அனுமதி பெறாமல் பரப்பி வருகின்றனர்.
அது சட்ட ஒழுங்கை பாதித்து பொது அமைதிக்கு பாதிப்பு விளைவிக்கும் வகையிலும், பொதுமக்கள் மத்தியில் தேவையற்ற பதற்றத்தை உருவாக்கும் வகையிலும் உள்ளது. எனவே சட்டம் ஒழுங்கை பாதுகாக்கவும், பொதுமக்களின் நலனை கருத்தில் கொண்டும், தேவையற்ற பதற்றத்தை தவிர்க்கும் விதமாகவும் நவம்பர் 26 ஆம் தேதி முதல் டிசம்பர் 10 ஆம் தேதி வரை எந்த ஒரு பொதுக்கூட்டம் மற்றும் ஆர்ப்பாட்டம் நடத்துவதற்கு தடை விதிக்கப்படுகிறது. இதனை மீறி போராட்டத்தில் ஈடுபடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்ற காவல் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.