சிறு தொழில்களுக்கு ஆதரவளிக்கக் கூடிய வகையில் அமேசான் நிறுவனம் டிசம்பர் 12ஆம் தேதி அதிரடி விற்பனையை அறிவித்துள்ளது.
நாட்டில் உள்ள பெரும்பாலான மக்கள் அமேசான் மூலமாக பல்வேறு பொருள்களை வாங்குகின்றனர். அதற்கு ஏற்ற வகையில் அமேசான் நிறுவனம் பல்வேறு அதிரடி அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறது. அதன்படி சிறு தொழில்களுக்கு ஆதரவளிக்க மற்றும் அவர்களின் தொழில் வளர்ச்சியை ஊக்கப்படுத்த கூடிய வகையிலும் அமேசான் நிறுவனம், டிசம்பர் 12ம் தேதி தள்ளுபடி உடன் கூடிய சிறுதொழில் தின விற்பனையை அறிவித்துள்ளது.
மேலும் டிசம்பர் 12ஆம் தேதி நள்ளிரவு தொடங்கும் விற்பனை இரவு 11.59 மணி வரை நடைபெறும். இந்த சிறப்பு விற்பனையில் சிறு தொழில்களின் தயாரிப்புகள், கைவினைஞர்கள், நெசவாளர்கள் மற்றும் உள்ளூர் கடைகள் என பல தரப்பினரின் பொருட்கள் விற்பனைக்கு வரும். இந்த அறிவிப்பை வாடிக்கையாளர்கள் இடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.