இந்தியாவின் டிசம்பர் 15ஆம் தேதி முதல் யாஹூ குழுக்களில் மின்னஞ்சல் அனுப்பவும் பெறவும் முடியாது என அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
உலகில் உள்ள அனைத்து மக்களும் பல்வேறு தொழில்நுட்பங்களை பயன்படுத்தி வருகிறார்கள். தங்கள் வாழ்க்கையை தொழில்நுட்பங்கள் மூலமாகவே இயக்கிக் கொண்டு வருகிறார்கள். நண்பர்கள் மற்றும் உறவினர்களை நேரில் பார்த்து அன்பு கொள்ளும் காலம் போய், அலைபேசி மூலமாகவே உறவாடி வருகிறார்கள். பல்வேறு முக்கிய தகவல்களை மின்னஞ்சல் மூலமாக அனுப்புவதற்கு ஜிமெயில் மற்றும் யாஹூவை பயன்படுத்தி வருகிறார்கள்.
இந்நிலையில் கடந்த பல ஆண்டுகளாக பயன்பாட்டில் சரிவை எதிர் கொண்டதால், டிசம்பர் 15 முதல் மூட முடிவு செய்துள்ளதாக யாஹூ குரூப்ஸ் அறிவித்துள்ளது. அதன்படி டிசம்பர் 15 முதல் மக்கள் யாஹூ குழுக்களில் மின்னஞ்சல் அனுப்பவும் பெறவும் முடியாது. வலை தளத்தை எடுக்க முடியாது. மேலும் நீங்கள் அனுப்பிய மற்றும் பெறப்பட்ட இமெயில்கள் உங்கள் இ-மெயிலில் இருக்கும். ஆனால் உங்கள் குரூப் நண்பர்களுக்கு அனுப்பப்படாது அல்லது தரப்படாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த திடீர் அறிவிப்பு பொது மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.