நாடு முழுவதும் கடந்த 2020ஆம் வருடம் முதல் கொரோனா வைரஸ் பரவியதன் காரணமாக முழு ஊரடங்கு நாடு முழுவதும் அமல்படுத்தப்பட்டது. இதனால் அனைத்து விமான சேவைகளும் நிறுத்தப்பட்டன. தற்போது கொரோனா இரண்டாவது தாக்கம் குறைந்து வருவதால் பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டிருக்கிறது. இதற்கிடையில் சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய மத்திய விமான போக்குவரத்து துறை செயலாளர் ராஜீவ் பன்சால் விரைவில் சர்வதேச விமான போக்குவரத்து இயல்பு நிலைக்கு கொண்டு வரும் என்று தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில் இன்று வர்த்தக ரீதியான சர்வதேச பயணிகள் விமான சேவை அடுத்த மாதம் 15ம் தேதி முதல் தொடங்கும் என்று விமான போக்குவரத்து துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்த அறிவிப்பால் வெளிநாடுகளுக்கு செல்ல திட்டமிட்டிருக்கும் பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.