தென்னாப்பிரிக்காவில் கொரோனா வைரஸ் ஒமிக்ரோன் என்ற புதிய வைரசாக உருமாறி உலக நாடுகளை அதிர வைத்துள்ளது. இந்த வைரஸ் அதிக பாதிப்பை ஏற்படுத்தும் என்று கூறப்படுகிறது. இந்த புதிய வகை வைரஸ் 24 நாடுகளில் பரவி உள்ளது என்று உலக சுகாதார மையம் தெரிவித்துள்ளது. அதன்படி இந்தியாவில் கர்நாடக மாநிலத்தை சேர்ந்த 2 பேருக்கும் ஒமிக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் இந்தியாவில் விமானம் நிலையங்களில் பயணிகளுக்கு மருத்துவ பரிசோதனை உள்ளிட்ட பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
இந்நிலையில் மும்பையில் கொரனோ ஊரடங்கு முடிந்துள்ள நிலையில் டிசம்பர் 1ம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால் ஒமிக்ரான் வைரஸ் தொற்று காரணமாக பள்ளிகளுக்கு டிசம்பர் 15 ஆம் தேதி வரை விடுமுறை அளிக்கப்படுகிறது என்று அந்த மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி 1 முதல் 7-ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு வருகின்ற டிசம்பர் 15ஆம் தேதி வரை விடுமுறை என்று அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
அதுமட்டுமில்லாமல் 1- 7 ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு மாநகராட்சி சார்பில் முக கவசம் மற்றும் கிருமிநாசினி போன்றவற்றை அனைத்து பள்ளிகளுக்கும் வழங்கப்படும் என்று மும்பை மாநகராட்சி அதிகாரி ராஜி தட்வி தெரிவித்துள்ளார். மேலும் பெற்றோர்கள் விருப்பத்துடன் மட்டுமே மாணவர்கள் பள்ளிக்கு வர வேண்டும் என்றும் அப்படி பெற்றோர்களுக்கு விருப்பம் இல்லையென்றால் ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்தப்படும் என்று தெரிவித்துள்ளார்.