Categories
அரசியல் மாநில செய்திகள்

டிசம்பர் 19ஆம் தேதி… நாம் தமிழர் கட்சி… மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம்…!!!

விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்து டிசம்பர் 19ஆம் தேதி நாம் தமிழர் கட்சியினர் மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம் நடத்தப் போவதாக தகவல் வெளியாகியுள்ளது.

மத்திய அரசு நிறைவேற்றியுள்ள வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் அனைவரும் டெல்லியில் தொடர்போராட்டம் நடத்தி வருகின்றனர். மத்திய அரசு பல்வேறு கட்ட பேச்சுவார்த்தை நடத்தியும் எந்த ஒரு பலனும் இல்லை. வேளாண் சட்டத்தை முழுவதுமாக திரும்ப பெறும் வரையில் போராட்டம் தொடரும் என விவசாயிகள் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் நாடு முழுவதும் பாரத் பந்த் போராட்டம் கடந்த வாரம் நடந்தது. அதன் தொடர்ச்சியாக நேற்று ஒருநாள் உண்ணாவிரத போராட்டத்தில் விவசாயிகள் ஈடுபட்டனர்.

இந்நிலையில் வேளாண் சட்டத்தை திரும்பப் பெற வலியுறுத்தியும், டெல்லி விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தும் நாம் தமிழர் கட்சி சார்பில் மாநிலம் தழுவிய மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் வருகின்ற டிசம்பர் 19ஆம் தேதி சனிக்கிழமை அன்று மாலை 4 மணியளவில் சென்னை,வள்ளுவர் கோட்டத்தில் சீமான் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்றும் தொண்டர்கள் அனைவரும் கலந்து கொள்ள வேண்டும் எனவும் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |