முதுநிலை அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் மாணவர்களுக்கு வரும் டிசம்பர்-2ம் தேதி கல்லூரிகள் திறக்கப்பட உள்ளதாக கேபி அன்பழகன் தெரிவித்துள்ளார்.
உலகம் முழுவதும் கொரோன பரவல் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. இந்தியாவிலும் இந்த நிலை ஏற்பட்டதால், தமிழகத்தில் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டு இருந்தது. இந்நிலையில் மாணவர்களின் நலன் கருதி ஆன்லைன் மூலம் வகுப்புகள் நடத்தப்பட்டு கொண்டிருந்தன. இதனால் மாணவர்கள் அவர்களுடைய அன்றாட வகுப்புகளை ஆன்லைன் மூலமாக கற்றுக் கொண்டிருந்தனர். இந்நிலையில் முதுநிலை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப மாணவர்களுக்கு டிசம்பர் 2ஆம் தேதி முதல் வகுப்புகள் ஆரம்பிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
ஏனெனில் செய்முறை தேர்வை மாணவர்களுக்கு ஆன்லைனில் நடத்த முடியாது. எனவே கல்லூரிகள் திறக்கப்பட உள்ளதாக உயர் கல்வித் துறை அமைச்சர் கே.பி அன்பழகன் தெரிவித்துள்ளார். மேலும் டிசம்பர் இரண்டாம் தேதி கல்லூரிகள் பல்கலைக்கழகங்கள் திறக்கப்படும் என்று கூறிய அவர், மற்ற வகுப்புக்கான கல்லூரி திறப்பு தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்றும் அமைச்சர் திட்டவட்டமாக கூறியுள்ளார்.