Categories
மாநில செய்திகள்

“டிசம்பர் 2-வது வாரத்திற்கு பின் இருக்காது”… மெட்ராஸ் ஐ குறித்து அமைச்சரின் மா.சுப்ரமணியன் பேச்சு …!!!!!

தமிழ் நாட்டில் உள்ள பல்வேறு மாவட்டங்களில் கடந்த ஒரு வாரமாக  மெட்ராஸ் ஐ பாதிப்பு வேகமாக பரவி வருகிறது. இது ஆடினோ வைரஸ் எனும் கிருமியால் கண்ணில் கன்சங்டிவா என்னும் விழி வெண் படலத்தில் ஏற்படும் நோயாகும். இது குறித்து மக்கள் நல வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது, செப்டம்பர் மாததொடக்கத்தில்  இருந்து தமிழகத்தில் மெட்ராஸ் ஐ பரவல் அதிகரித்துக் வருகிறது. இதன் அறிகுறிகளானவை சிவந்த நிறம், கண்ணில் உருத்தல், வீக்கம், அதிக கண்ணீர் போன்றவை ஆகும்.

மேலும் குடும்பத்தில் யாருக்கேனும் இந்த  பாதிப்பு ஏற்பட்டு இருந்தால் அவர்கள் 4 நாட்கள் தனிமைப்படுத்திக் கொள்ளவும். மெட்ராஸ் ஐ பாதிப்பு ஏற்பட்டவர்கள் தானாக முன்வந்து மருந்தகங்களில் கண் மருந்து வாங்க வேண்டாம் எனவும் மருத்துவர் அறிவுறுத்தல் படி மருந்து வாங்கி பயன்படுத்த வேண்டும் எனவும் கூறியுள்ளார். டிசம்பர் இரண்டாவது வாரத்திற்கு பின் மெட்ராஸ் ஐ  இருக்காது. தமிழகத்தில் மெட்ராஸ் ஐ  நோயால் தினமும் 4,500 பேர் பாதிக்கப்படுகின்றனர். அதனால் மெட்ராஸ் ஐ பரவலை கட்டுப்படுத்த பல்வேறு மருத்துவ மையங்கள் அமைக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்படுவதாக  தெரிவித்துள்ளார்.

Categories

Tech |