கடலூர் மாவட்டத்திற்கு டிசம்பர் 20ஆம் தேதி உள்ளூர் விடுமுறையாக அம்மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். டிசம்பர் 20ஆம் தேதி கடலூர் மாவட்டத்தில் சிதம்பரம் பகுதியில் உள்ள நடராஜர் கோவிலில் ஆருத்ரா தரிசன நிகழ்ச்சி நடைபெற உள்ளது. இந்த நிகழ்ச்சியை முன்னிட்டு கடலூர் மாவட்டம் முழுவதும் டிசம்பர் 20ஆம் தேதி உள்ளூர் விடுமுறையாக மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். இதனை ஈடுகட்டும் விதமாக ஜனவரி 8ஆம் தேதி சனிக்கிழமை வேலை நாளாக இருக்கும் என்று அவர் உத்தரவிட்டுள்ளார்.
Categories