நாடு முழுவதும் கொரோனா தொற்று பரவல் காரணமாக பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டுருந்தது. அரசின் பல்வேறு முயற்சிகளினாளும், மக்களுக்கு தடுப்பூசி மீது உள்ள ஆர்வத்தினாலும், தொற்று குறைந்து மக்கள் இயல்பு நிலைக்கு திரும்பி வந்துள்ளனர். இந்தநிலையில், பல்வேறு மாநிலங்களிலும் பள்ளிகளை திறக்க நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் சண்டிகர் யூனியன் பிரதேசத்திலும் கடந்த மாதங்களில் தான் பள்ளிகள் முழுவதும் மீண்டும் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது.
மேலும் பள்ளிகளில் முறையான தடுப்பு நடவடிக்கைகளை பின்பற்றுமாறு அரசு வலியுறுத்தி வருகிறது. மேலும் கொரோனா 2-ஆம் கொரோனா தொற்றுக்கு மத்தியில் சண்டிகர் யூனியன் பிரதேச அரசு பள்ளிகளில் குளிர் கால விடுமுறையை மாற்றியமைத்து உத்தரவிட்டுள்ளது. அதன்படி, சண்டிகர் கல்வி அலுவலகம் மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் குளிர்கால விடுமுறையை மாற்றி அமைத்துள்ளது.
இதுதொடர்பாக வெளியிடப்பட்ட அரசாங்க உத்தரவின்படி, திருத்தப்பட்ட அட்டவணையின்படி டிசம்பர் 20 முதல் ஜனவரி வரை பள்ளிகளுக்கு குளிர்காலம் விடுமுறைகள் இருக்கும். பள்ளிகள் ஜனவரி 10-ஆம் தேதி மீண்டும் திறக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த குளிர்கால விடுமுறைகள் பண்டிகை காலங்களில் வருவதாலும், விடுமுறையானது வழக்கத்தை விட முன்கூட்டியே விடப்படுவதால் மாணவர்கள் மத்தியில் இந்த அறிவிப்பு நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இப்போது அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு கிட்டத்தட்ட 21 நாட்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.