அனைத்து கிறிஸ்தவர்களாலும் டிசம்பர் 25-ஆம் தேதி கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாடப்படும். இந்த கிறிஸ்துமஸ் பண்டிகையை கொண்டாட மக்கள் தற்போதிருந்தே தயாராகி வருகிறார்கள். இந்நிலையில் கிறிஸ்துமஸ் ஈவ்-ஐ முன்னிட்டு வரும் 24ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அளித்து கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
இந்த விடுமுறைக்கு பதிலாக ஜனவரி 11ஆம் தேதி வேலைநாளாக அமையும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், பிற மாவட்டங்களுக்கும் விடுமுறை அளிக்கப்படுவது குறித்த அறிவிப்பு அடுத்தடுத்து வெளியாக வாய்ப்புள்ளது.