Categories
தேசிய செய்திகள்

டிசம்பர் 26 முதல்… விவசாயிகளுக்கு உதவித்தொகை… அரசு அதிரடி அறிவிப்பு…!!!

இந்தியாவில் டிசம்பர் 26 ஆம் தேதி முதல் விவசாயிகளுக்கு நேரடி மானிய உதவித் தொகை வழங்கப்படும் என்று மத்திய வேளாண் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

மத்திய அரசு நிறைவேற்றியுள்ள வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் அனைவரும் வெளியில் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த ஒரு மாதமாக கொட்டும் பனியிலும் கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் விவசாயிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மத்திய அரசு பல்வேறு கட்ட பேச்சுவார்த்தை நடத்திய போதிலும் எந்த ஒரு முடிவும் எட்டப்படவில்லை. வேளாண் சட்டத்தை முழுவதுமாக திரும்ப பெறும் வரையில் எங்கள் போராட்டம் தொடரும் என விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.

நாடு முழுவதும் விவசாயிகளுக்கு ஆதரவு பெருகியுள்ளது. இந்நிலையில் டிசம்பர் 26 ஆம் தேதி முதல் விவசாயிகளுக்கு நேரடி மானிய உதவித் தொகை வழங்கப்படும் என மத்திய வேளாண் அமைச்சர் நரேந்திர சிங் தோமர் தகவல் தெரிவித்துள்ளார். மேலும் கடந்த எட்டு மாதங்களில் விவசாயிகளின் வங்கிக் கணக்கில் 1 லட்சம் கோடி எழுதப்பட்டுள்ளது என்று அவர் கூறியுள்ளார்.

Categories

Tech |