சொத்துக்குவிப்பு வழக்கில் சிறை சென்ற சசிகலா டிசம்பர் 3ஆம் தேதி வெளியாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சொத்துக்குவிப்பு வழக்கில் சசிகலா உள்ளிட்ட மூவர் கடந்த 2017ஆம் ஆண்டு சிறைக்குச் சென்றார். இவர்களின் தண்டனை காலம் விரைவில் முடிய உள்ளது. இந்நிலையில் சசிகலா நன்னடத்தை காரணமாக முன்னதாகவே விடுதலை செய்ய உள்ளார் என தகவல் தொடர்ந்து வெளியாகியுள்ளது.
கடைசியாக ஆர்டிஐ மூலம் கிடைத்த தகவலின் அவர் 2021 ஆம் ஆண்டு ஜனவரி 27ம் தேதி விடுதலை ஆவார் எனக் குறிப்பிடப்பட்டிருந்தது. இந்நிலையில் அவர் தற்போது டிசம்பர் 3ஆம் தேதி விடுதலை ஆகலாம் என்றும் சசிகலாவிற்கு நெருங்கிய நபர்கள் தெரிவித்துள்ளனர். மேலும் விடுதலையானதும் முதலில் அவர் ஜெயலலிதாவின் நினைவிடத்திற்கு சென்று அஞ்சலி செலுத்துவார். ஏனென்றால் டிசம்பர் 5-ஆம் தேதி ஜெயலலிதாவின் நினைவு நாள் ஆகும். அன்றுதான் அவர் சென்னைக்கு வருவார் என்று கூறப்படுகிறது.