Categories
Tech

டிசம்பர் 31-க்கு பிறகு இந்த 49 போன்களில் whatsapp இயங்காது…. பயனர்களுக்கு ஷாக் நியூஸ்…..!!!!

ஒவ்வொரு வருடமும் whatsapp ஒரு சில ஃபோன்களில் தன்னுடைய சேவையை நிறுத்துவதை வழக்கமாகக் கொண்டுள்ளது. அவ்வகையில் இந்த வருடமும் சில ஃபோன்களில் whatsapp சேவையை நிறுத்த உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. whatsapp செயலியில் வழங்கப்படும் புதிய அம்சங்கள் பழைய ஓஎஸ் கொண்ட சாதனங்களில் இயங்காமல் போகலாம் என்பதாலும் சீரான இடைவேளையில் பழைய ஆண்ட்ராய்டு மற்றும் ஐஓஎஸ் சாதனங்களில் whatsapp சேவை நிறுத்தப்படும்.

அதன்படி இந்த வருடம் நிறைவுக்கு வரும் நிலையில் வாட்ஸ்அப் தனது சேவைகளை சில ஆண்ட்ராய்டு மற்றும் ஐ போன் மாடல்களுக்கும் சேவைகளை நிறுத்த முடிவு செய்துள்ளது. இதனால் வாட்ஸ் அப் பயனர்கள் எந்தவித அச்சமும் கொள்ள வேண்டாம் எனவும் காலாவதியான மற்றும் பழைய இயங்கத்தலங்களை கொண்டுள்ள போன்களில் மட்டுமே whatsapp நிறுத்தப்பட உள்ளதாகவும் அந்த நிறுவனம் அறிவித்துள்ளது.டிசம்பர் 31ஆம் தேதி வாட்ஸ் அப் நிறுவனம் ஆப்பிள் மற்றும் சாம்சங் உள்ளிட்ட பல பிராண்டுகளில் கிட்டத்தட்ட 49 ஸ்மார்ட் ஃபோன்களுக்கான ஆதரவை நிறுத்த உள்ளதாக அறிவித்துள்ளது.

 49 போன்கள்: ஆப்பிள் ஐபோன் 5, ஆப்பிள் ஐபோன் 5சி, ஆர்காஸ் 53 பிளாட்டினம், கிராண்ட் எஸ் பிளெக்ஸ் ZTE, கிராண்ட் எக்ஸ் குவாட், ஹெச்டிசி டிசையர், Huawei அசெண்ட் டி, அசெண்ட் டி1, அசெண்ட் டி2, அசெண்ட் ஜி740, அசெண்ட் மேட், அசெண்ட் பி1, குவாட் எக்ஸ்எல், லெனோவா ஏ820, எல்ஜி எனாக்ட், எல்ஜி லூசிட் 2, எல்ஜி ஆப்டிமஸ் 4எக்ஸ் ஹெச்டி மற்றும் எல்ஜி ஆப்டிமஸ் சீரிஸ் போன்கள், மெமொ ZTE, சாம்சங் கேலக்சி ஏஸ்2, கேலக்சி கோர், கேலக்சி எஸ்2, கேலக்சி எஸ்3 மினி, கேலக்சி டிரெண்ட் 2, கேலக்சி டிரெண்ட் லைட், கேலக்சி எக்ஸ்கவர் 2, சோனி எக்ஸ்பீரியா சீரிஸ்களில் 3 மாடல், விகோ போனில் 2 மாடல்கள் என மொத்தம் 49 போன்கள்

Categories

Tech |