Categories
தேசிய செய்திகள்

டிசம்பர் 31 வரை ரத்து… திடீரென வெளியான பகீர் அறிவிப்பு…!!!

இந்தியா முழுவதிலும் விமானப் போக்குவரத்து டிசம்பர் 31ஆம் தேதி வரையில் ரத்து செய்யப்படுவதாக விமான போக்குவரத்து இயக்குனரகம் தெரிவித்துள்ளது.

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக இந்தியா முழுவதிலும் சர்வதேச விமான போக்குவரத்து ரத்து செய்யப்பட்டது. இதற்கு முன்னதாக நவம்பர் 30-ஆம் தேதி வரை ரத்து செய்யப்படுவதாக உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. அதன்படி சில முக்கிய வழித்தடங்களில் மட்டும் சிறப்பு அனுமதி பெற்று விமானங்கள் இயங்கி வந்தன. இந்த நிலையில் இதுதொடர்பாக விமான போக்குவரத்து இயக்குனரகம் ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

அது சர்வதேச விமான போக்குவரத்து டிசம்பர் 31-ஆம் தேதி வரை ரத்து செய்யப்படுவதாக குறிப்பிட்டுள்ளது. மேலும் சிறப்பு அனுமதி பெற்று இயங்க கூடிய சேவைகள் மட்டுமே தொடரும் என்றும், இந்த ரத்து சரக்கு விமானங்களுக்கு பொருந்தாது என்றும் தெரிவித்துள்ளது.

Categories

Tech |