Categories
சினிமா

டிசம்பர் 4ல் ரசிகர்களுக்கு விஜய் கொடுக்கும் செம ட்ரீட்…. என்ன தெரியுமா?…. சூப்பர் அப்டேட்….!!!!

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வந்து கொண்டிருக்கும் விஜய் நடிப்பில் வம்சி இயக்கத்தில் வாரிசு திரைப்படம் உருவாகி வருகிறது. இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு கிட்டத்தட்ட முடிவடைந்துள்ள நிலையில் இறுதி கட்டப் பணிகள் விறுவிறுப்பாக நடந்து கொண்டிருக்கின்றன. திரைப்படம் பொங்கலுக்கு வெளியாக உள்ளதாக படக்குழு அறிவித்துள்ள நிலையில் அண்மையில் படத்தின் முதல் பாடல் ரஞ்சிதமே வெளியிடப்பட்டது. இந்தப் பாடலை விஜய் பாடியிருந்த நிலையில் ரசிகர்கள் மத்தியில் சூப்பர் ஹிட் கொடுத்துள்ளது.

இந்நிலையில் வருகின்ற டிசம்பர் நான்காம் தேதியுடன் விஜய் சினிமாவில் காலடி வைத்து 30 ஆண்டுகள் முடிவடையும்நிலையில் இதை கொண்டாடும் வகையில் அன்று வாரிசு திரைப்படத்தின் இரண்டாவது பாடலை வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. தமன் இசையமைத்த இந்த பாடலை அனிருத் பாடியுள்ளார். அதுமட்டுமல்லாமல் டிசம்பர் நான்காம் தேதி இன்னும் சில அப்டேட்டுகளை எதிர்பார்க்கலாம் எனவும் தகவல் வெளியாகி உள்ளது. அதே சமயம் வாரிசு படத்தின் இரண்டாவது பாடலுக்கான பட்ஜெட் மட்டும் ஆறு கோடி என தகவல் வெளியாகி உள்ளது. 500 ஜூனியர் ஆர்டிஸ்ட் களை கொண்டு இந்த பாடல் படமாக்கப்பட்டுள்ளது. இந்தப் பாடலுக்கு ஜானி மாஸ்டர் தான் நடன இயக்குனர் என்பதால் பாடல் பக்கா மாசாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Categories

Tech |