Categories
மாநில செய்திகள்

திரும்பவும் முதல்ல இருந்தா…? டிசம்பர் 4 முதல் மீண்டும் கன மழைக்கு வாய்ப்பு… வானிலை தகவல்…!!!!

டிசம்பர் 4 முதல் மீண்டும் கன மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அந்தமான் கடல் பகுதியில் நிலவும் காற்றழுத்த தாழ்வு பகுதி மேற்கு வடமேற்கு திசையில் நகர்ந்து இன்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவும், நாளை புயலாகவும் வலுப்பெற்று மத்திய வங்கக் கடல் பகுதியில் நகரக் கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தென் கிழக்கு மற்றும் அதனை ஒட்டிய கிழக்கு மத்திய வங்காள விரிகுடா, அந்தமான் நிக்கோபார் தீவுகள் மற்றும் அந்தமான் கடல் பகுதியில் மணிக்கு 70 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசும் என்று தெரிவித்துள்ளது.

இந்த புயல் காரணமாக டிசம்பர் 4ஆம் தேதி முதல் தமிழகத்தில் கனமழை பெய்யும் என்றும், மதுரை, விருதுநகர், நெல்லை ஆகிய மாவட்டங்களில் நாளை மறுநாள் கனமழை பெய்யக்கூடும் எனவும், அதனை தொடர்ந்து டிசம்பர் 5 நீலகிரி, கோவை, சேலம், தர்மபுரி, ஈரோடு, தேனி , மதுரை, சிவகங்கை, விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Categories

Tech |