Categories
மாநில செய்திகள்

டிசம்பர் 4 வரை… மக்கள் வீட்டை விட்டு வெளியே வரவேண்டாம்… முதல்வர் அதிரடி அறிவிப்பு…!!!

தமிழக தென் மாவட்ட மக்கள் டிசம்பர் 4ஆம் தேதி வரையில் வெளியே வரவேண்டாம் என முதல்வர் பழனிசாமி உத்தரவு பிறப்பித்துள்ளார்.

வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் மேலும் வலுப்பெற்று புயலாக மாறியுள்ளது. அதனால் தென் தமிழக மாவட்டங்களில் டிசம்பர் 4 ஆம் தேதி வரையில் அதிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் டிசம்பர் 4ஆம் தேதி வரை பெரும் மழை மற்றும் புயல் வீசக் கூடும் என்பதால் தென் மாவட்ட மக்கள் வெளியே செல்ல வேண்டாம் என தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அதிரடியாக உத்தரவு பிறப்பித்துள்ளார்.

மேலும் ஆழ்கடலுக்கு மீன்பிடிக்க சென்ற மீனவர்கள் உடனடியாக கரைக்கு திரும்ப வேண்டும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. குமரி, நெல்லை, தேனி, விருதுநகர் மற்றும் சிவகங்கை ஆகிய மாவட்டங்களில் முன்னெச்சரிக்கை ஏற்பாடுகளை உடனடியாக செய்ய வேண்டும் என முதல்வர் உத்தரவிட்டுள்ளார். அதுமட்டுமன்றி புயல் காரணமாக மக்கள் அனைவரும் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Categories

Tech |