தமிழகத்தில் முக்கிய நிகழ்வுகள் மற்றும் திருவிழாக்களின் போது ஒவ்வொரு மாவட்டங்களிலும் மாவட்ட ஆட்சியர்கள் சார்பாக உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டு வருகிறது. அவ்வகையில் திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை ஜாம்பவான் ஓடை, தர்கா கந்தூரி விழா வருடம் தோறும் வெகு விமர்சையாக நடைபெறும். அந்த விழாவில் பல்வேறு நிகழ்ச்சிகள் தொடர்ந்து 14 நாட்கள் நடைபெறும் நிலையில் இந்த விழாவின் முக்கிய விழாவான சந்தனக்கூடு நிகழ்வுக்கு மட்டும் நாடு முழுவதும் உள்ள ஆயிரக்கணக்கான மக்கள் வருகை தருவார்கள்.
இந்நிலையில் இந்த திருவிழாவை முன்னிட்டு மாவட்டம் முழுவதும் வருகின்ற டிசம்பர் 5ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். அதே சமயம் இந்த விடுமுறையை ஈடு செய்யும் விதமாக டிசம்பர் 10ஆம் தேதி 14 ஆக கருதப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.