Categories
அரசியல் மாநில செய்திகள்

டிசம்பர் 6ல் தேமுதிக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்… கேப்டன் விஜயகாந்த் அறிவிப்பு!!

தேமுதிக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் டிசம்பர் 6 ஆம் தேதி நடைபெறும் என அக்கட்சியின் தலைவர் விஜயகாந்த் அறிவித்துள்ளார்..

இதுகுறித்து விஜயாகாந்த் தனது ட்விட்டர் பக்கத்தில், தேமுதிக தலைமை அலுவலகத்தில் 6/12/2021 காலை 10 மணிக்கு மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற உள்ளது. நகர்புற உள்ளாட்சி தேர்தல்,கட்சியின் வளர்ச்சி போன்ற பல்வேறு முக்கிய விஷயங்கள் குறித்து கலந்தாலோசிக்கப்படும். தேமுதிக மாவட்ட செயலாளர்கள் அனைவரும் கூட்டத்தில் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும்.” என்று குறிப்பிட்டுள்ளார்..

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் தேமுதிக தனித்துப் போட்டியிடும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்ட நிலையில், இந்த ஆலோசனை கூட்டம் நடைபெறுவது குறிப்பிடத்தக்கது..

Categories

Tech |