Categories
மாநில செய்திகள்

டிசம்பர் 7 வரை ரயில் சேவை ரத்து…. வெளியான திடீர் அறிவிப்பு….!!!

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பருவமழை பெய்து வருகிறது. அதனால் பல்வேறு இடங்களில் தண்ணீர் அதிகமாக தேங்கியுள்ளது. தமிழகத்தில் உள்ள பெரும்பாலான நீர்நிலைகளும் நிரம்பி வழிகின்றன. பல இடங்களில் தரைப்பாலம் துண்டிக்கப்பட்டுள்ளது. அதனால் போக்குவரத்து பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் இருந்து ஊட்டி வரை இயக்கப்படும் மலை ரயில் சேவையானது டிசம்பர் 7ஆம் தேதி வரை ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ரயில் பாதையில் ஏற்பட்ட மண்சரிவு காரணமாக ஏற்கனவே நவம்பர் 30-ஆம் தேதி வரை ரயில் சேவை ரத்து செய்யப்பட்ட நிலையில், தற்போது டிசம்பர் 7ஆம் தேதி வரை ரயில் சேவை ரத்து நீட்டிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |