Categories
தேசிய செய்திகள்

டிசம்பர் 8 முதல்… ரயில் பயணிகளுக்கு ஹேப்பி நியூஸ்… வெளியான அறிவிப்பு..!!

சென்னை எழும்பூர், சென்ட்ரல் ஆகிய இடங்களில் இருந்து மன்னார்குடி, பாலக்காடு உள்ளிட்ட இடங்களுக்கு மேலும் 8 ரயில்கள் இயக்கப்படும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

கொரோனா தடுப்பு நடவடிக்கையின் காரணமாக தமிழகத்தில் ரயில் சேவை ரத்து செய்யப்பட்டிருந்தது. மேலும் செப்டம்பர் 1-ம் தேதியிலிருந்து ரயில் சேவை மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது. சென்னை எழும்பூர், சென்ட்ரல் ஆகிய ரயில் நிலையங்களில் இருந்து செங்கோட்டை, மதுரை உள்ளிட்ட தென் மாவட்டங்களுக்கும், பெங்களூரு, திருவனந்தபுரம் உள்ளிட்ட அண்டை மாநிலங்களுக்கும் ரயில் இயக்கப்பட்டு வருகின்றது.  மொத்தம் 15 க்கும் மேற்பட்ட ரயில்கள் சென்னையிலிருந்து தினந்தோறும் இயக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் மேலும் எட்டு தினசரி சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

சென்னை எழும்பூரிலிருந்து மன்னார்குடி, ராமேஸ்வரம், குருவாயூர் ஆகிய இடங்களுக்கும், சென்னை சென்ட்ரலில் இருந்து பாலக்காடு, மங்களூரு, திருவனந்தபுரம் ஆகிய இடங்களுக்கும் டிசம்பர் 8ஆம் தேதி இந்த சிறப்பு ரயில்கள் நாள்தோறும் இயக்கப்படும் என்று தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது. இதேபோன்று கோவையில் இருந்து நாகர்கோவில் இடையே தினசரி ரயில்கள் இயக்கப்பட உள்ளது. மேலும் எழும்பூரிலிருந்து நாகர்கோவிலுக்கு வாராந்திர சிறப்பு ரயில் டிசம்பர் 10ஆம் தேதி முதல் இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |