15-ஆம் நூற்றாண்டை சேர்ந்த சீனாவின் அரச வம்ச கிண்ணத்தை அமெரிக்காவை சேர்ந்த நபர் ஒருவர் வாங்கியுள்ள சம்பவம் வைரலாகி வருகிறது.
அமெரிக்காவைச் சேர்ந்த நபர் ஒருவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு கடையில் ஒரு கிண்ணத்தை ரூ. 2545 கொடுத்து வாங்கியுள்ளார். மேலும் அந்தக் கிண்ணத்தில் இருந்த வேலைப்பாடுகளைப் பார்த்து விலைமதிப்புள்ளதாக இருக்கலாம் என கருதிய அவர் இணையதளத்தில் தேடி பார்த்துள்ளார். அதுமட்டுமில்லாமல் அமெரிக்காவில் இருக்கும் சோத்பே நிறுவனத்தை தொடர்பு கொண்டு அந்தக் கிண்ணத்தின் புகைப்படங்களை அவர்களுக்கு அனுப்பியுள்ளார்.
அந்த சோத்பே நிறுவனத்தில் பணிபுரியும் சீன நிபுணர்கள் நீண்ட ஆராய்ச்சிக்குப் பின் அந்தக் கிண்ணம் பதினைந்தாம் நூற்றாண்டைச் சேர்ந்த சீனாவில் வாழ்ந்த மிங் அரச வம்சத்தை சார்ந்தது என்பதை கண்டுபிடித்துள்ளனர். மேலும் இந்த கிண்ணம் சோத்பே நிறுவனத்தின் சார்பில் ஏலம் விடப்பட உள்ளதாகவும், இது 3 முதல் 6 லட்சம்(அமெரிக்க டாலரில்) மதிப்பில் விலையுயர்ந்தது எனவும் அவர்கள் தகவல் தெரிவித்துள்ளனர்.