Categories
தேசிய செய்திகள்

“டிச.13 முதல் இனி ஐபோன்களில் 5ஜி சேவை”… பயன்படுத்துவது எப்படி…? புதிய iOS 16.2 வசதிகள் என்ன…?

ஆப்பிள் நிறுவனம் அதன் ஐபோன் 12 சீரிஸ் மேல்  இருக்கும் அனைத்து மாடல்களுக்கும் 5ஜி சேவை கிடைக்கும் என அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதை டிசம்பர் 13 இரவு 11:30 முதல் பயன்படுத்திக் கொள்ளலாம் என கூறியுள்ளது. தற்போது இந்தியாவில் jio மற்றும் airtel என இரண்டு நிறுவனங்கள் மட்டுமே 5ஜி சேவையை வழங்கி வருகிறது. இந்த இரண்டு நிறுவனங்களின் சிம்கார்டு பயன்படுத்தும் ஐபோன் வாடிக்கையாளர்கள் இந்த 5ஜி சேவையை இனி அவர்களின் ஐபோன்களில் பயன்படுத்திக் கொள்ளலாம். இந்நிலையில்  ஆப்பிள் நிறுவனம் புதிதாக அதன் ஃபோன்களில் ios 16.2 வெர்ஷனை வழங்கியுள்ளது.  அதனால் 5ஜி சேவை கிடைக்கும் நகரங்களில் மக்கள் இந்த வசதியை பயன்படுத்திக் கொள்ளலாம். மேலும் இந்த 5ஜி சேவையானது iphone 12, iphone 13, iphone 14 என புதிய மாடல் அனைத்திலும் கிடைக்கிறது. இது தவிர iphone se மாடலும் இந்த வசதி கிடைக்கிறது.

 

  1. முதலில் உங்களின் ஐபோனை திறந்து அதில் இருக்கும் ‘Settings’ ஆப்ஷனுக்கு செல்லவும். பின்னர் General ஆப்ஷனுக்கு சென்று ‘Software Update’ ஆப்ஷனை கிளிக் செய்யவும். இதனால் உங்களுக்கு புதிய iOS 16.2 வெர்ஷன் டவுன்லோட் ஆகும். பின்னர் Install செய்யவும்.
  2. புதிய அப்டேட் ‘install’ ஆனதும் உங்களின் போனை ரீஸ்டார்ட் செய்யவும். பின் Cellular ஆப்ஷன் சென்று Data ON செய்யவும். இதை நீங்கள் Jio, Airtel என எந்த சிம் மூலமாகவும் செய்யலாம்.
  3. இதில் நீங்கள் தேவை ஏற்பட்டால் ‘Default Auto’ மோடில் வைக்கலாம். இதன்மூலம் உங்களின் ஐபோன் தானாகவே 4G மற்றும் 5G சேவைகளுக்கு மாற்றிக்கொள்ளும். இதனால் உங்களின் போன் பேட்டரி கூடுதலாக நிலைத்திருக்கும். இல்லையென்றால் நீங்கள் 5G அல்லது LTE என இரு ஆப்ஷன்களில் எதை வேண்டுமானாலும் பயன்படுத்தலாம். இந்த புதிய os அப்டேட் பயிற்சி சேவை மட்டுமல்லாமல் சில புதிய வசதிகளையும் கொண்டுள்ளது.Freeform.
    மேலும் இதில் புதிதாக freeform என்ற ஆப் உள்ளது. இந்த ஆப் மூலமாக நாம் நேரடியாக எழுதவும், வரையவும் முடியும். இதில் ipads,iphones,macs என அனைத்திலும் கிடைக்கிறது. மேலும் இதை நாம் apple pencil கொண்டும் பயன்படுத்திக் கொள்ளலாம்.Apple music sing.
    இது ஒரு புதிய karaoke மோட் கொண்ட ஆப். இந்த ஆப்பில்  நமக்கு பிடித்தமான பாடல்களை பாடி கொள்ளலாம். மேலும் பாடல்களை வரிகள் நமக்கு நம்முடைய திரையில் தெரியும் விதமாக மேம்படுத்தப்பட்டுள்ளது.

    SOS via satelite.

    இந்த ஆப் மூலமாக நாம் உலகில் எங்கு இருந்தாலும் நம்முடைய இடத்தை மிகத் துல்லியமாக காட்டும் ஒரு வசதி ஆகும். இது தற்போது iphone14 சீரிஸ் போன்களில் மட்டுமே கிடைக்கிறது.

    இதை தவிர ஆப்பிள் நிறுவனம் அதன் UI டிசைன்களில் மாற்றம் செய்து புதிய மேம்படுத்தப்பட்ட “lock screen”, “notifications”, “always on display” போன்ற வசதிகள் மேம்படுத்தப்பட்டுள்ளது. மேலும் Airdrop பயன்படுத்தி நாம் மற்றறொருவருக்கு data பகிர்வது தற்போது நேரம் குறைக்கப்பட்டு 10 நிமிடங்களாக மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து  game center மூலமாக இனி நமது நண்பர்கள் என்ன செய்கிறார்கள் என்பதை கூட கண்காணித்துக் கொள்ள முடிகிறது. இது தவிர கூடுதலாக sleep மற்றும் ‘medication widget’ வசதி சுலபமாக message app மூலமாக போட்டோக்களை எடுப்பது ‘icould’ மேம்பாடு விபத்து ஏற்பட்டால் அறிவதற்கான ‘crash detection’ போன்ற வசதிகள் மேம்படுத்தப்பட்டுள்ளது.

Categories

Tech |