Categories
மாநில செய்திகள்

டிச-21 ஆம் தேதி வரை…. மலை ரயில் சேவை ரத்து…. ரயில்வே நிர்வாகம் அறிவிப்பு…!!!!

நீலகிரி மாவட்டத்தில் தொடர்ந்து கனமழை பெய்ததன் காரணமாக மேட்டுப்பாளையம் ஊட்டி மலை ரயில் பாதையில் ஆங்காங்கே மண்சரிவு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக டிசம்பர் 14ஆம் தேதி வரை மலை ரயில் சேவை ரத்து செய்யப்படுவதாக ஏற்கனவே தெற்கு ரயில்வே நிர்வாகம் அறிவித்திருந்தது.

இந்த நிலையில் உதகை -மேட்டுப்பாளையம் இடையேயான மலை ரயில் சேவை டிசம்பர் 21-ஆம் தேதி வரை ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது. கனமழையின் காரணமாக ரயில் பாதையில் ஏற்பட்டுள்ள மண்சரிவை சீரமைக்கும் பணி இன்னும் முடிவடையாததால் ரயில் சேவை டிசம்பர் 26-ம் தேதி வரை ரத்து செய்யப்படுவதாக விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |