Categories
அரசியல் சற்றுமுன் மாநில செய்திகள்

டிச.23ல் இருந்து ஸ்டாலின் நேரடி பரப்புரை – திமுக தலைமை முடிவு …!!

டிசம்பர் 23ஆம் தேதி முதல் திமுக தலைவர் முக.ஸ்டாலின் நேரடியாக பரப்புரை செய்கின்றார்.

சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் சென்னை அண்ணா திமுக கூட்டம் நடைபெற்று வருகிறது. திமுக மாவட்ட செயலாளர்கள் முக்கிய நிர்வாகிகளுடன் முக.ஸ்டாலின் ஆலோசனை நடத்துகின்றார். இதில் திமுக எம்எல்ஏக்கள், எம்பிக்கள், மாவட்ட செயலாளர்கள், மாவட்ட – நகர – ஒன்றிய திமுக செயலாளர்களும் பங்கேற்றுள்ளனர்.

இதில் திமுக தலைவர் மு.க ஸ்டாலின் முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்ட உள்ளார். இந்நிலையில் இந்த கூட்டத்தில் பேசிய திமுகவின் பொருளாளர் துரைமுருகன், கூட்டத்தின் இறுதியில் ஸ்டாலின் ஒரு போர் குரலை அறிவிக்க உள்ளார். தேர்தல் களத்திற்கு செல்பவர்களை ஸ்டாலின் வாழ்த்து அனுப்ப போகிறார் என தெரிவித்தார்.

மேலும் டிசம்பர் 23ஆம் தேதி முதல் ஜனவரி 10 வரை திமுக சார்பில் கிராம சபைக் கூட்டங்கள் நடத்தப்பட உள்ளது. தனது பரப்புரையில் 16,000 கிராமசபை கூட்டங்களை நடத்தி நிர்வாகிகளை ஸ்டாலின் சந்திக்க உள்ளார். டிசம்பர் 23-ஆம் தேதி திமுக தலைவர் மு க ஸ்டாலின் நேரடித் தேர்தல் பரப்புரையில் ஈடுபட உள்ளார் எனவும் திமுக பொருளாளர் துரைமுருகன் பேசியுள்ளார்.

Categories

Tech |