Categories
மாநில செய்திகள்

டிச.26 ஆம் தேதி வேலைவாய்ப்பு முகாம்….. அரிய வாய்ப்பு…. மிஸ் பண்ணிடாதீங்க….!!!

திருவாரூரில் வரும் 26ஆம் தேதி மாபெரும் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளதாக ஆட்சியர் காயத்ரி கிருஷ்ணன் தெரிவித்துள்ளார் . இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:திருவாரூர் மாவட்டத்தில் படித்து வேலைதேடும் இளைஞர்களுக்காக மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் நடத்தப்பட உள்ளது.  இந்த வேலைவாய்ப்பு முகாம் திருவாரூர், மயிலாடுதுறை சாலை, புதுத் தெருவில் உள்ள நியூபாரதி மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளியில் வரும் 26-ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்த முகாமில் தொழில்துறை, சேவைத்துறை, விற்பனை துறைகளை சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட தனியார் துறை நிறுவனங்கள் சுமார் 5 ஆயிரம் தகுதியுள்ள நபர்களை வேலைக்கு தேர்ந்தெடுத்த உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அதுமட்டுமில்லாமல் மாவட்டத்தில் உள்ள திறன் பயிற்சி நிறுவனங்கள் இதில் கலந்துகொண்டு இலவச திறன் பயிற்சிக்கு ஆட்களை தேர்வு செய்ய உள்ளனர். உயர்கல்வி சுயவேலைவாய்ப்பு மற்றும் வங்கி கடன் குறித்து சம்பந்தப்பட்ட துறைகளுக்கு தனி அரங்குகள் அமைத்து வழிகாட்ட உள்ளனர். இந்த முகாமில் எட்டாம் வகுப்பு முதல் ஐடிஐ, டிப்ளமோ, பி.இ, நர்சிங் உள்ளிட்ட கல்வி தகுதி உடைய 18 முதல் 40 வயதுக்குட்பட்ட இளைஞர்கள், மாற்றுத்திறனாளிகள் என அனைவரும் கலந்து கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. வேலை வாய்ப்பு முகாமிற்கு வரும் நபர்கள் தங்களின் சுய விபரக் குறிப்பு, ஆதார், கல்வி சான்று நகலுடன் கலந்து கொள்ளவேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |