தென்னாபிரிக்காவில் கண்டறியப்பட்ட உருமாறிய ஒமைக்ரான் கொரோனா வைரஸ் உலக நாடுகளிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தி வருகிறது. இந்தியாவில் கடந்த 2ஆம் தேதி ஒமைக்ரான் நுழைந்தது. இதனையடுத்து ஒவ்வொரு மாநிலமாக நுழைந்து வருகிறது. இதனால் ஒமைக்ரான் பரவலை கட்டுப்படுத்த அனைத்து மாநிலங்களும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன.
இந்நிலையில் இந்தியாவில் ஒமைக்ரான் பாதிப்பு 213 ஆக அதிகரித்துள்ள நிலையில் இன்று மதியம் பிரதமர் மோடி அவசர ஆலோசனை நடத்துகிறார். இந்த ஆலோசனைக்கு பிறகு ஊரடங்கு தொடர்பான பல்வேறு அறிவிப்புகளை வெளியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக டிசம்பர் 31ஆம் தேதி முதல் மீண்டும் கட்டுப் பாடுகளுடன் கூடிய ஊரடங்கு அமல்படுத்த அறிவுறுத்தப்படும் என்று தகவல் வெளியாகியுள்ளது.