Categories
மாநில செய்திகள் வானிலை

டிச.,5-ஆம் தேதி வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம்..!!

டிசம்பர் 5ஆம் தேதி வங்கக்கடலில் அந்தமான் அருகே குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாட்டால் தமிழ்நாட்டில் இன்று முதல் 5 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. காற்றழுத்த தாழ்வு பகுதி படிப்படியாக வலுப்பெற்று புயலாக மாற வாய்ப்புள்ளது. அதாவது, படிப்படியாக வலுப்பெறும் காற்றழுத்த தாழ்வு பகுதி டிசம்பர் 8 மற்றும் 9 ஆம் தேதிகளில் புயலாக மாறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்றும், நாளையும் தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Categories

Tech |