கேரள கடலோர பகுதிகளில் மேல் நிலவும் வளிமண்டல கீழ் அடுக்கு சுழற்சியின் காரணமாக தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் போன்ற ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். டிசம்பர் 5-ஆம் தேதி வங்கக்கடலில் அந்தமான் அருகே உருவாகக்கூடிய காற்றழுத்த தாழ்வு பகுதியானது படிப்படியாக வலுப்பெற்று புயலாக மாறும்.
மேலும் கிழக்கு திசை காற்றின் மாறுபாட்டின் காரணமாக தமிழகத்தில் இன்று முதல் 5 நாட்களுக்கு மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படுவதாகவும் நகரின் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் எனவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் அதிகபட்ச வெப்பநிலை 30 டிகிரி செல்சியஸ் ஆகும் குறைந்தபட்ச வெப்பநிலை 24 டிகிரி செல்சியஸ் என்ற அளவிலும் இருக்கக்கூடும்.