2022-23-ஆம் நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டை நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்துள்ளார். அந்த மத்திய பட்ஜெட்டில் 2023-ஆம் ஆண்டுக்குள் டிஜிட்டல் கரன்சி அறிமுகப்படுத்தப்படும் என்று அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த நிலையில் பிரதமர் நரேந்திர மோடி டிஜிட்டல் கரன்சி பணமாக மாற்றிக் கொள்ள முடியும் என்று தெரிவித்துள்ளார்.
மேலும் டிஜிட்டல் கரன்சி புதிய வாய்ப்புகளை உருவாக்குவதன் மூலம் நிதி தொழில்நுட்ப துறையில் புரட்சியை ஏற்படுத்தும் என்றும், பணத்தை கையாளுதல், அச்சிடுதல், மேலாண்மை ஆகியவற்றில் சுமையை குறைக்கும் என்றும் அவர் கூறியுள்ளார்.