வெளிநாடுகளில் கருப்புபணத்தை ஒழிக்கவும், ரூபாய் நோட்டுகள் மற்றும் நாணயங்கள் அச்சிடும் செலவை குறைவுக்கவும் டிஜிட்டல் கரன்சி-ஐ பயன்படுத்தி வருகின்றனர். அதேபோன்று இந்தியாவிலும் டிஜிட்டல் கரன்சி அறிமுகப்படுத்தப்படும் என மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பட்ஜெட் தாக்கலின்போது அறிவித்தார். அந்த அடிப்படையில் இன்று மத்திய ரிசர்வ்வங்கி டிஜிட்டல் கரன்சியை அறிமுகம் செய்து இருக்கிறது.
இப்போது பொதுத்துறை வங்கியான SBI, பேங்க் ஆஃப் பரோடா, யூனியன் பேங்க் ஆஃப் இந்தியா போன்ற வங்கிகளிலும் தனியார் வங்கியான ஹெச்.டி.எப்.சி, ஐசிஐசிஐ, கோட்டக் மகிந்திரா உள்ளிட்ட 9 வங்கிகளில் சோதனை முறையில் டிஜிட்டல் கரன்சி பயன்பாட்டுக்கு வந்துள்ளது. இதை மத்திய-மாநில அரசுப்பத்திரங்கள், பங்கு பரிவர்த்தனை ஆகியவற்றில் பயன்படுத்தலாம் என ரிசர்வ் வங்கி தெரிவித்து உள்ளது.
இப்போது இது சோதனை முறையில் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது. இதன் பயன்பாடு மற்றும் வளர்ச்சியை பொறுத்து அரசு பத்திரங்களை தவிர்த்து பிறவற்றிலும் டிஜிட்டல்கரன்சி பயன்பாடுக்கு வரும் என ரிசர்வ் வங்கி தெரிவித்து இருக்கிறது. அத்துடன் டிஜிட்டல் நாணயத்தின் சில்லரை பயன்பாடும் ஒரு மாதத்தில் கொண்டுவரப்படும். இந்த டிஜிட்டல் கரன்சியால் பணப்பரிமாற்றம் எளிதாகவும் வேகமாகவும் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.